[X] Close

“நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்”- பெங்களூரு போலீசாருக்கு உத்தரவு

Nithyananda-location-details-to-be-furnished-by-18-says-Karnataka-High-court

வரும் 18-ஆம் தேதிக்குள் நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவின் சர்ச்சை வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன் என்பவர், நித்யானந்தாவுக்கு எதிராக பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் நேரில் ஆஜராக ஏற்கெனவே நித்யானந்தா விலக்கு பெற்றார். ஆனால், ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணை சரிவர நடைபெறுவதில்லை என்றும், நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்றும் லெனின் கருப்பன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 


Advertisement

இதை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டறிந்து அறிக்கை அளிக்க பெங்களூரு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை அளிக்கப்படவில்லை.‌ இதனால் வரும் 18-ஆம் தேதிக்குள் நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டறிந்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் ஆணையிட்டனர். அவ்வாறு இல்லையெனில் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுமெனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close