[X] Close

பேரறிவாளன் பரோல் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

TN-govt-extent-Perarivalan-parole-one-more-month

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் முடிவடையும் நிலையில் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 2-வது முறையாக பரோல் வழங்கப்பட்டது. தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரியின் மகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும், அவரது தாய் அற்புதம்மாள், பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதையேற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து சகோதரியின் மகள் திருமணத்தில் பேரறிவாளன் உற்சாகமாக கலந்துகொண்டார்.


Advertisement

பேரறிவாளனின் பரோல் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நலம் மோசமாக இருப்பதால் மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஒருமாதம் பரோல் காலத்தை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close