Published : 11,Dec 2019 11:29 AM
"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது"- நித்யானந்தா சிஷ்யைகள்

தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதால், காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக, நித்யானந்தாவின் சிஷ்யைகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, தனது இரு மகள்களை, நித்யானந்தா கடத்தி சென்றுவிட்டதாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு இந்திய தீவுகள் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக ஜனார்த்தன ஷர்மாவின் மகள்கள் கூறியுள்ளனர்.
ஆனால், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் என உறுதியளித்த நீதிபதிகள், இருவரையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.