
சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலிலில் இந்திய கிரிகெட் வீரர்கள் தோனியும், விராட்கோலியும் இடம்பெற்றுள்ளனர்.
விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் 100 பேர் கொண்ட பட்டியலை ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் கோலி 13 வது இடத்தையும், தோனி 15 வது இடத்தையும் பிடித்துள்ளனர். அனைத்து விளையாட்டு வீரர்களும் அடங்கிய இந்தப்படியலில், யுவராஜ் சிங் 90 வது இடத்தையும், சுரேஷ் ரெய்னா 95 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.