[X] Close

‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்

It-s-Official--Keerthy-Suresh-in-Rajinikaanth-s--Thalaivar-168-

‘தலைவர்168’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.


Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆகவே இது குறித்த செய்திகள் அனைத்தும் ‘தலைவர் 168’ என்றே பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் செய்தி வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கெனவே சில தகவல்கள் கசிந்தன. அதனை இப்போது உறுதி செய்துள்ளது இந்த அறிவிப்பு.


Advertisement

இந்த வாய்ப்பு குறித்து ஒரு வீடியோ பதிவு தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது மகிழ்ச்சியை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ரஜினிகாந்தின் பெரிய ரசிகை நான். அவருடைய 168வது படத்தில் நானும் இருக்கேன் என்பது பெரிய பெருமையா இருக்கு. அதற்காக ரஜினிகாந்திற்கும் சிறுத்தை சிவாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ரஜினியிடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜும் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

ஏற்கெனவே இப்படத்தில் மீனா நடிக்க உள்ளதாக ஒருதகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close