Published : 31,May 2017 08:46 AM
கேள்வி கேட்ட பத்திரிகையாளரை முத்தமிட்ட டென்னிஸ் வீரர்

பிரஞ்சு டென்னிஸ் வீரர் மேக்சைம் ஹாமு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை கட்டியணைத்து முத்தமிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து டென்னிஸ் வீரர் மேக்சைம் ஹாமு வெளியேற்றப்பட்டார். திங்களன்று நடைபெற்ற போட்டியில் ஹாமு தோல்வியடைந்ததை தொடர்ந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, நேற்று மாலை டென்னிஸ் வீரர் மேக்சைம் ஹாமுக்கு ஒரு தனியார் தொலைகாட்சியில் நேர்காணல் நடைபெற்றது. மாலியில் தாமஸ் எனும் பத்திரிகையாளர் அவரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேள்விக்கேட்ட பத்திரிகையாளரை மேக்சைம் ஹாமு கட்டியணைத்து முத்தமிட்டது பரப்பரப்பை எற்படுத்தியது. நேர்காணலில் மோசமாக நடந்து கொண்ட மேக்சைம் ஹாமு நடத்தை மிகவும் மோசமானது. இந்த செயலுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என அந்த தொலைக்காட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். பத்திரிகையாளர் மாலியில் இது குறித்து கூறுகையில், அந்த நிகழ்ச்சி நேரலையாக இல்லையெனில் ஹாமுவை அந்த இடத்திலே அறைந்து இருப்பேன். நேரலையாக ஒளிபரப்பானதால் பொறுமையாக இருந்தேன் என்று கூறினார்.
இதேபோல், ஜனவரி 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் பத்திரிகையாளரிடம் தவறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.