[X] Close

ஜெர்மனியில் பிரதமர் மோடி- பிரியங்கா சோப்ரா திடீர் சந்திப்பு

PM-Modi-Priyanka-chopra-Meet

பிரதமர் மோடியை நடிகை பிரியங்கா சோப்ரா ஜெர்மனியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கிறார்.

ஆறு நாள்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதல் நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி ஜெர்மன் சென்றார்.

பிரியங்கா சோப்ராவின் "பேவாட்ச்" ஹாலிவுட் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படத்தின் புரொமோஷனுக்காக தற்போது அவரும் ஜெர்மனியில் தான் இருக்கிறார். இந்நிலையில் ஜெர்மனின் பெர்லின் நகரில் பிரதமர் மோடியும் பிரியங்கா சோப்ராவும் தற்செயலாக சந்தித்து பேசியுள்ளனர். பிரதமர் மோடியுடன் பிரியங்கா சோப்ரா புகைப்படமும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close