Published : 15,Jan 2017 10:28 AM

ரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. 3 பேர் கைது

Kerala--New-currency-worth-Rs-52-5-lakhs-seized--3-held

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கணக்கில் வராத ரூ.52.5 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை இருவேறு இடங்களில் நடந்த சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோழிக்கோடு-மஞ்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். வள்ளுவம்புரம் என்ற இடத்தில் தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்லுர் ரஹ்மான் மற்றும் உன்னிமோயி ஆகியோரிடம் சோதனை செய்ததில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல மஞ்சேரி காவல்நிலையம் அருகே வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஜாம்ஷீர் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்