
அஜீத்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இப்போதும் சில நேரங்களில் என்னையும் அறியாமல் குழந்தையைப்போல சாக்லேட்களை திருடிச் சாப்பிடுகிறேன். காரணம் நான் சாக்லேட் சாப்பிடுவதை விரும்புகிறேன் என்று தெரிந்தும் எனது மனைவி அந்த விஷயத்தில் ஸ்டிர்க்ட் ஆக இருக்கிறார். ’சாக்லேட் அதிகம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்’ என கறார் காட்டுகிறார். எனது குழந்தைகளுக்கு வாங்கி வைத்திருக்கும சாக்லேட்டுகளை எனக்கு தெரியாத வெவ்வேறு இடங்களில் வைத்து மறைத்து விடுகிறார்’என வேடிக்கையாய் சொல்கிறார் விவேக் ஓபராய்.