Published : 30,May 2017 05:04 PM
கருணாநிதியை யாரும் சந்திக்க வேண்டாம்: திமுக வேண்டுகோள்

திமுக தலைவர் கருணாநிதியை பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்னும் சிறிது காலம் ஓய்வு தேவைப்படும் என்றும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பார்வையாளர்களை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகமும், கழகமுமே வாழ்வு என அயராது பாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, விரைந்து முழுநலன் பெற தொண்டர்களின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாளன்று, கருணாநிதிக்கு ஓய்வளித்து அவர் விரைந்து நலன் பெற உறுதுணை செய்யும் வகையில் தொண்டர்கள் நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது