ஸ்பெயின் விமான நிலையத்தில் நிர்வாணமாக திரிந்த மர்ம நபர் யார்?

ஸ்பெயின் விமான நிலையத்தில் நிர்வாணமாக திரிந்த மர்ம நபர் யார்?
ஸ்பெயின் விமான நிலையத்தில் நிர்வாணமாக திரிந்த மர்ம நபர் யார்?

ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் உள்ள சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தில் நிர்வாணமாக மர்ம நபர் ஒருவர் திரிந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் உள்ள முக்கியமான பயணிகள் அதிகமாக சென்று வரும் விமான நிலையங்களுள் ஒன்றான சன் சாண்ட் ஜோன் விமான நிலையத்தின் வெளிநாட்டு பயணிகள் வருகையில் பகுதியில், வெளிநாட்டு பயணி ஒருவர் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திரிந்த காட்சி விமான நிலைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

நிர்வாணமாக நடந்து சென்ற அந்த மர்ம நபர் கையில் பைகள் ஏதுமில்லை. மாறாக வருகை அறைக்குள் சுற்றித்திரிந்த அந்த மர்ம நபர், பின்னர் அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுள்ளார். 

இதுகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், வருகை பகுதிக்கு சென்று பார்த்த போது, அந்த நபர் அங்கில்லை. நிர்வாணமாக சுற்றித்திரிந்த மர்ம நபர் எங்கு சென்றார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், கடைசியாக வந்த மான்செஸ்டர் விமானத்தில் வந்திருக்கக் கூடும் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்த தகவல் கிடைத்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com