புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் இரவு நேரத்தில் வெங்காயம் திருடியவரை வியாபாரிகள் அடித்து உதைத்தனர்.
நாடு முழுவதும் கடுமையான மழைப் பொழிவால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு 17 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
இதனியைடே புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற குபேர் மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெறுகிறது. வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கடையில் வைக்கப்பட்டிருந்த பூண்டு, வெங்காயம், மிளகாய் மூட்டை போன்றவை திருடு போயின. இதனை கண்காணித்த வியாபாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் வெங்காயம் உள்ளிட்ட மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச்சென்ற நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் வெங்காய மூட்டையை திருடியது தெரியவந்தது. அவரைக் கட்டி வைத்து உதைத்த வியாபாரிகள், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை மர்ம நபர்கள் அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதேபோல் தமிழகத்திலுள்ள கூத்தனூரில் 50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயம் திருடு போன சம்பவம் ஒன்று அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'