ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அனிருத் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''ரமணா பார்த்தபோதே முருகதாஸை எனக்குப் பிடித்துவிட்டது. கஜினி முடித்ததும் அவரும் நானும் படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும் தள்ளிப்போய்விட்டது. வயசாகிவிட்டது. இனி டூயட் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து கபாலி, காலா படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
நான் 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தர்பார் படம் ஸ்டைலாக, த்ரில்லாக இருக்கும். சந்திரமுகி படத்தைக் காட்டிலும், நயன்தாரா கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார்.
இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு நிகரான இசை ஞானம் படைத்தவர்கள் யாரும் கிடையாது.
அந்த திறமை அனிருத்துக்கு இப்போதே இருக்கிறது. வரும் 12ம் தேதி முக்கியமான நாள். 69 வயதில் இருந்து 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன்.
வழக்கம்போல் அன்றைய தினம் நான் ஊரில் இருக்க மாட்டேன். என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். நல்ல நடிகன் ஒருவன் வந்தால் ரஜினி என பெயர் வைக்க வேண்டுமென பாலச்சந்தர் யோசித்துவைத்திருந்த ஒரு பெயரைத் தான் எனக்கு அவர் வைத்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதேபோல் நீங்களும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது
தமிழக அரசு மீது பல விமர்சனங்களை இருந்தாலும், இந்த அரங்கை இசை வெளியீட்டு விழாவிற்கு கொடுத்ததற்கு நன்றி என தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி