Published : 15,Jan 2017 10:06 AM

ஆந்திர முதல்வரின் சொந்த ஊரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

Jallikkattu-held-in-Andhra-CM-chandrababu-s-hometown

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான நாராவாரிபள்ளிக்கு அருகில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் இந்த போட்டிகளை தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள ரெங்கம்பேட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்த போட்டிகளைக் காண சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பொறுத்தவரை யாருக்கும் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. காளைகளின் தலையில் கட்டப்பட்டுள்ள அட்டைகளை அவிழ்ப்பவரே காளையை அடக்கியவராகக் கருதப்படுவார்.