Published : 30,May 2017 10:48 AM

தேசிய கீதத்தை மறந்தாரா ட்ரம்ப்..?

TRUMP-SINGS-NATIONAL-ANTHEM


அமெரிக்காவில் நடந்த போர் வீரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேசிய கீதத்தை உரக்கப் பாடினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி இருக்கிறது. 

ஆர்லிங்டன் தேசிய நினைவிடத்தில் நடைப்பெற்ற போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது ட்ரம்ப் தேசிய கீதத்தை உரக்கப் பாடினார். இந்தக்காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ட்ரம்பை சமூகவலைதளங்களில் பலர் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். 

அதற்கு காரணம் தேசியகீதத்தை பாடுவதை அவர் பாதியிலேயே நிறுத்தியதுதான். இதனால் தேசியகீதத்தை ட்ரம்ப் மறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் கேலி செய்யத் தொடங்கி இருக்கின்றனர். ’தேசிய கீதத்தைக் மனப்பாடம் செய்யக்கூட உங்களுக்கு நேரம் இல்லையா..?’என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்