[X] Close

உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

Tamil-Nadu-Local-Body-Election---ADMK-District-secretaries-meeting-Tomorrow

ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலானது ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக முன்னேற்பாடுகளை செய்து வருகின்றது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தேர்தெடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. 


Advertisement

இந்நிலையில் நாளை மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு முறை மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் எனப்படுகிறது.

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி அறிவிப்பாணை


Advertisement

Advertisement
[X] Close