Published : 05,Dec 2019 03:39 AM

சென்னையில் இளம்பெண் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகள் அகற்றம்

759-cysts-removed-from-woman-s-abdomen-in-Chennai-hospital

சென்னையில் இளம்பெண்ணின் வயிற்றிலிருந்த 759 நீர்க்கட்டிகளை ஒரே அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நீர்கட்டிகள் எதனால் வருகிறது? அதனை தடுப்படு எப்படி? என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

சென்னையைச் சேர்ந்த 29 வயதான பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வயிற்றில் பெரிடோனியல் ஹைடடிட் எனப்படும் நீர்க்கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. ஒன்றல்ல,இரண்டல்ல சுமார் 759 நீர்க்கட்டிகள் இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள், ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்து நீர்கட்டிகளையும் அகற்றி சாதனை படைத்தனர்.

வயிற்றில் நீர்க்கட்டிகள் வளரும் போது, எந்தவிதமான அறிகுறிகளும் நோயாளிகளுக்கு தெரியவராது என்கிறார்கள் மருத்துவர்கள். நீர்க்கட்டிகள் வளர்ந்த பிறகு திடீரென கடுமையாக வயிற்று வலி ஏற்படும் எனவும், வயிற்றுக்குள்ளேயே நீர்கட்டிகள் வெடித்து விட்டால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீர்க்கட்டிகள் வராமல் தடுக்க சுத்தமான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நாய், ஆடுகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், கைகளை நன்கு சுத்தம் செய்ய பின்னரே உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை‌யாக உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்