Published : 05,Dec 2019 02:55 AM

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

Traffic-Transfer-in-Chennai

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதா நினைவிடத்தின் வடக்கிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவுச்சின்னம் சந்திப்பிலிருந்து கொடிமரச் சாலை, அண்ணா சாலை வழியே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் முத்துசாமி பாயின்டிலிருந்து வரும் வாகனங்கள், கொடிமரச் சாலைக்கு செல்லாமல் அண்ணா சாலை வழியே செல்லவும், நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு சுவாமி சிவானந்த சாலை வழியே செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள், காந்தி சிலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியே செல்லவும் விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பாரதி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியே செல்லவும், அண்ணா சாலையில் வரும் வாகனங்கள் சுவாமி சிவானந்த சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்காமல் நேருக்கு நேராக அண்ணா சாலையில் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்