Published : 04,Dec 2019 08:27 AM

மன உளைச்சலால் பெண் தற்கொலை - திருநங்கை மீது புகார்

lalgudi-murder-case

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மனைவி விஜயகுமாரி. இவரது வீட்டின் அருகே கிருஷ்ணமூர்த்தி என்கிற திருநங்கை சோனாலி வசித்து வருகிறார். சோனாலிக்கு விஜயகுமாரி சித்தி உறவுமுறை ஆவார். சோனாலிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சோனாலிக்கும் விஜயகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநங்கையான சோனாலி, விஜயகுமாரியை பணம் கேட்டு துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் மனமுடைந்த விஜயகுமாரி கடந்த 26ம் தேதி வீட்டில் வைத்திருந்த எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

லால்குடி காவல்நிலையத்திற்கு சென்று ‘என் மன உளைச்சலுக்கும் நான் இறந்தால் அதற்கும் காரணம் திருநங்கை சோனாலிதான்’ என்று கூறிவிட்டு பின்னர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாரி கடந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு திருநங்கை சோனாலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்