“இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ?” - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்

“இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ?” - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்
“இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ?” - கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது.

அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த இடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், ‘இது பாகுபாட்டின் சுவர் .... பரிதாபகரமான மற்றும் வேதனையான சம்பவம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com