Published : 30,May 2017 05:27 AM

மஸ்தான் கதைதானா காலா? முஸ்லிம் கெட்டப்பில் ரஜினி!

Rajinikanth-in-muslim-getup

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் ‘காலா’.  தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். இந்தி நடிகை ஹுமா குரேஷி ஹீரோயின். இவர்களுடன் இந்தி நடிகர், நானா படேகர், இந்தி நடிகை அஞ்சலி பாட்டீல், ஈஸ்வரிராவ், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இது, மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை கதை என்று கூறப்பட்டது. இதை படக்குழு மறுத்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினி முஸ்லிம் தொப்பி அணிந்து வருவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் மும்பை பத்திரிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இதனால் இது மஸ்தானின் வாழ்க்கை கதையாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, ’காலா’ போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப்பை, மகேந்திரா நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்க விரும்புவதாக அந்நிறுவன செயல் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருந்தார். அதற்கு பதலளித்துள்ள தனுஷ், ’படப்பிடிப்பு முடிந்ததும் ஜீப், உங்களை வந்து சேரும்’ என்று தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்