‘கா’ படத்திற்கான 30 நாள்கள் படப்பிடிப்பை நடிகை ஆண்ட்ரியா நிறைவு செய்துள்ளார்.
இயக்குநர் நாஞ்சில் இயக்கி வரும் திரைப்படம் ‘கா’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதையொட்டி படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் நடிகை ஆண்ட்ரியா வன உயிரின புகைப்படக் கலைஞராக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு அடர்ந்த வனப்பகுதியில் நடைபெற்றது. மொத்தம் 30 நாள்கள் ஒளிப்புகா காட்டிற்குள் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதில் பங்கேற்று தனக்கான காட்சிகளில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில் மூணார் வனப் பகுதியில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பை ஆண்ட்ரியா நிறைவு செய்துள்ளார். இதுவே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது.
இது குறித்து இயக்குநர் நாஞ்சில், “மூணார் வனப் பகுதிக்குள் காட்சிகளை படமாக்கி வந்தோம். ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு காட்டு யானை திடீரென்று புகுந்தது. இதனைக் கண்டு படக்குழுவே அதிர்ச்சியடைந்து விட்டது”எனக் கூறியுள்ளார். மேலும் வனக் காவலர் உதவியுடன் நாங்கள் எல்லோரும் தப்பிப் பிழைத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் நடிகரும் தற்காப்பு கலைஞருமான சலீம் கவுஸ் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ‘கா’ என்றால் தமிழில் ‘அடர்ந்த காடு’ என்பது பொருளாம். த்ரிலர் மற்றும் ஆக்ஷன் நிறைந்த இப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு சவாலான பெண் பாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நமது ஒழுக்க நெறிகள் சிதைந்துவிட்டன” பிரியங்கா, ரோஜா மரணம் குறித்து அக்ஷய் குமார் வேதனை |
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!