[X] Close

உ.பி.யில் அமைகிறது காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி?

UP-elections--Samajwadi-Party-Congress-likely-to-enter-alliance-next-week

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே ஏறத்தாழ உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி நிறுவனரான முலாயம் சிங் யாதவிற்கும் அவரது மகனும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவிற்கும் இடையே தொடர் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க இந்த வாரத்தில் அகிலேஷ் யாதவ் டெல்லிக்கு செல்ல உள்ளார். இதனிடையே, காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே ஏறத்தாழ கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியாகும் என காங்கிரசின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close