மிரட்டும் ‘குயின்’ டீஸர் - 26 நொடிகளில் இத்தனை தகவல்களா ?

மிரட்டும் ‘குயின்’ டீஸர் - 26 நொடிகளில் இத்தனை தகவல்களா ?

மிரட்டும் ‘குயின்’ டீஸர் - 26 நொடிகளில் இத்தனை தகவல்களா ?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘குயின்’ வெப் சீரியஸின் டீஸர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் தமிழக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜயும், ‘த அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கிறார்கள். இதில், ‘த அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

அதேபோல், ‘தலைவி’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ராவத் நடித்து வருகிறார். இதேபோல், கௌதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரியஸ் தயாராகி வருகிறது. இதில், கௌதம் உடன் பிரசாத் முருகேசன் என்பவரும் இயக்குநராக பணியாற்றுகிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘குயின்’ வெப் சீரீஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று டீஸர் வெளியாகியுள்ளது. 26 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த டீஸரில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி பருவம் முதல் முதலமைச்சர் வரையிலான ஜெயலலிதாவின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள பல விஷயங்கள் இதில் உள்ளன. 

பள்ளியில் ‘டாப்’ மாணவி, 18 வயதில் ‘சூப்பர் ஸ்டார்’ ஹீரோயின், இளம் வயதில் மாநில முதலமைச்சர் என்ற வாசகம் டீஸரில் இடம்பெற்றுள்ளது. சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, மேடைகளில் பேசுவது போல் காட்சி உள்ளது. இளம் வயதில் ஜெயலலிதா நடனத்தில் சிறந்தவராக விளங்கினார் என்பதை குறிக்கும் வகையில் நடனம் ஆடுவது போல் காட்சிகள் உள்ளன.

அதேபோல், அதிமுகவில் பெண்கள் அணியும் கட்சி கரையுடன் கூடிய சேலை அணிந்து பெரிய கூட்டத்திற்கு முன்பு அவர் உரையாற்றுகிறார். குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டுகிறார். அரசியல் பொதுக் கூட்டம் ஒன்றில் அவருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. 

டீஸரில் இடம்பெற்றுள்ள போஸ்டரில் ஜி.எம்.ஆர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்-க்கு பதிலாகவே ஜி.எம்.ஆர் என்ற பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் ஷக்தி என்ற பெயரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

தேசிய பேரறிஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்று கட்சியின் பெயர் ஒரு அலுவலகத்தில் (சமய நல்லூர்) எழுதப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை குறிக்கும் வகையிலே இது இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இறுதியாக ஒரு கோயில் குளத்தில் ஜெயலலிதா இருக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் 1992 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தில் கலந்து கொண்ட நிகழ்வு மறக்க முடியாதது. அதனை குறிக்கும் வகையில் இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எந்தக் காட்சியிலும் ஜெயலலிதாவின் முகம் காட்டப்படவில்லை. இதனால், ஒரு எதிர்பார்ப்பை வரவழைக்கும் வகையில் டீஸர் உள்ளது. முன்னதாக வெளியான போஸ்டரிலும் முகம் காட்டப்படவில்லை. இதனையடுத்து, டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என டீஸரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com