கோவை சீரநாயக்கன்பாளையத்தில் 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யா நகர் என்ற பூங்காவிற்கு சக நண்பர்களுடன் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் மணிகண்டன் என்பவர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து அவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், மற்றொரு நபர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்திற்கு ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகிய 4 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே: இணையதளத்தை பார்த்து செல்போன் திருடிய சிறுவர்கள் - 7 லேப்டாப், 4 செல்போன் பறிமுதல்
அந்த 4 பேரை முதல்கட்டமாக போக்சோவில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்