6 பந்தில் 5 விக்கெட், மிதுன் சாதனை: இறுதிப் போட்டியில் தமிழகம்- கர்நாடகா!

6 பந்தில் 5 விக்கெட், மிதுன் சாதனை: இறுதிப் போட்டியில் தமிழகம்- கர்நாடகா!
6 பந்தில் 5 விக்கெட், மிதுன் சாதனை: இறுதிப் போட்டியில் தமிழகம்- கர்நாடகா!

சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தமிழகம் கர்நாடகா அணிகள் மோத இருக்கின்றன.

சையது முஸ்டாக் அலி கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் கர்நாடகா- ஹரியானா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹரியானா 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன், ஒரே ஓவரில்,  5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

இதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அதாவது சையத் முஸ்தாக் அலி (டி-20), விஜய் ஹசாரே (ஒரு நாள் போட்டி), ரஞ்சி கோப்பை  ஆகிய போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

(மிதுன்)

அடுத்து களம் இறங்கிய  மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி, 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் 87 ரன்கள் அடித்தார்.

மற்றொரு அரை இறுதியில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான், 9 விக்கெட்டுக்கு 112 ரன்களுக்கு சுருண்டது. இந்த இலக்கை, 17.5 ஓவர்களில் எட்டிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. வாஷிங்டன் சுந்தர் 54 ரன்கள் அடித்தார்.

நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் மோதுகின்றன. இதே அணிகள்தான் விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியிலும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com