Published : 29,Nov 2019 05:41 AM

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக 6 புதிய மனுக்கள்

6-new-cases-filed-against-local-elections

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக 6 புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் புதிய மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

இதையும் படிக்கலாமே: உள்ளாட்சி தேர்தல்: அவசர வழக்காக விசாரிக்க திமுக முறையீடு   

ஏற்கனவே மறுவரையறை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகவில்லை எனவும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். புதிய மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யாமல் தேர்தலை நடத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்