கடலூரில் மழை காரணமாக மண்வீடு இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் கம்மியம்பேட்டையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தமது குடும்பத்தினர் ஐந்து பேருடன் உறங்கிக்கொண்டிருந்தார். ரயில்பாதையை ஒட்டியுள்ள இவர்களது வீட்டைச் சுற்றியும் கனமழை காரணமாக நீர் தேங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தீடீரென மண் வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது.
அட இதையும் படிக்கலாமே... வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : பிடிக்கவிடாமல் சாமி ஆடிய பெண்
இதில் இடிபாடுகளில் சிக்கி நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது பேத்தி தனுஸ்ரீ ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே பாதை அருகே வீடு அமைந்திருந்த நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்ற அதிர்வில் ஈரப்பதத்துடன் இருந்த வீடு இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide