Published : 29,May 2017 05:00 PM

விராட்கோலி சாதனையை முறியடித்த ஆம்லா

Hashim-Amla-breaks-Virat-Kohli-s-record--becomes-fastest-to-7000-ODI-runs

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹாஷிம் ஆம்லா ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும் குறைவான போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தார். 34 வயதாகும் ஆம்லா தமது 150-வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை படைத்துள்ளார். 161 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய அணிக் கேப்டன் விராட் கோலியின் முந்தைய சாதனையை, ஆம்லா முறியடித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்