Published : 29,May 2017 03:58 PM
மெக்காவில் கால்பந்து வீரர் போக்பா: வைரலாகும் புகைப்படம்!

உலகிலேயே மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரரான பால் போக்பா, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவுச் சென்று வழிபட்டார்.
மெக்காவில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. மான்செஸ்டர் யுனைட்டர் அணி போக்பாவை சுமார் 800 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. இதையடுத்து, உலகிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர் என்ற பெயர் போக்பாவுக்கு வந்தது. மிகவும் நம்பிக்கையளிக்கும் கால்பந்து வீரர் என்றும் அவர் போற்றப்படுகிறார்.