Published : 29,May 2017 03:10 PM

மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு: 31ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்

MK-Stalin-To-Protest-Ban-On-Sale-Of-Cattle-For-Slaughter-On-May-31

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையைக் கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் தங்கள் மாடுகளை உரிய முறையில் விற்க முடியாத அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர். மரபுசார்ந்த வேளாண்மை குறித்த அக்கறையின்றி மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அண்டை மாநிலங்கள் எதிர்த்துள்ள நிலையில் தமிழக அரசு மௌனம் காக்கிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான உணவு உரிமை பறிக்கப்படுவதை கண்டித்து நாளை மறுநாள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்