
பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் விளையாடாது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து ஆலோசிப்பதற்காக இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் துபாயில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், பாகிஸ்தான் - இந்தியாவுடன் கிரிக்கெட் உறவு கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானுடன் விளையாட நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. அரசின் உத்தரவின்றி இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்காது. கிரிக்கெட் உறவு வேண்டுமா அல்லது பயங்கரவாதம் வேண்டுமா என பாகிஸ்தான் முடிவு செய்யட்டும் என தெரிவித்துள்ளார்.