Published : 26,Nov 2019 01:53 AM
அஜித் பவாருக்கு எதிரான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா?: லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக அஜித் பவாருக்கு எதிரான முறைகேடு வழக்குகளை பாஜக அரசு முடித்து வைத்துவிட்டதாக வெளியான தகவலை, லஞ்ச ஒழிப்புத் துறை மறுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில நீர்பாசன திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக முடிக்கப்பட்ட 9 வழக்குகளுக்கும், அஜித் பவார் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக ஆட்சி அமைக்க உதவியதற்கு பிரதிபலனாக, அஜித் பவாருக்கு எதிரான வழக்குகளை பாஜக அரசு முடித்து வைத்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருந்தது.
முன்னதாக மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. ஆட்சியமைக்க தங்களிடம் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக அந்த மூன்று கட்சிகளின் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ஜெயந்த் பாட்டீல், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் தரப்பில் அசோக் சவான் உள்ளிட்ட தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமைகோரி ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தில் 162 எம்எல்ஏக்களின் கையெழுத்து இடம்பெற்றுள்ளதாக சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.