[X] Close

“யாரும் வரமாட்டாங்க. வந்தாலும் சேர்ப்பதாக இல்லை” - கே.பி.முனுசாமி பேச்சு

KP-Munusamy-said

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல, இப்போது இருக்கும் தலைமை உயர்த்தி பேச வேண்டும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, “ஒபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டு தலைமை என்பது கூர்மையான கத்தி போன்றது. கொஞ்சம் தவறினாலும் பிரச்னையாகிவிடும். கூட்டு தலைமையாக இருந்து சிறப்பாக கட்சியை வழி நடத்துகின்றனர். ஒவ்வொரு நிர்வாகிக்குமான மரியாதையை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும். எந்த தியாகமும் செய்யவில்லை, அரசியல் பணியையும் செய்யவில்லை, ஆனால் கட்சியின் தலைமை பொறுப்பு ஸ்டாலினுக்கு சென்றது. அதுபோல கருணாநிதியின் குடும்பத்திற்கே தலைமை பொறுப்பு என்பது உதயநிதியின் வருகை மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.


Advertisement

எம்ஜிஆர் ஜெயலலிதாவை போல், இப்போது இருக்கும் தலைமை உயர்த்தி பேச வேண்டும். விட்டுகொடுத்துவிடக் கூடாது. அப்படி விட்டுவிட்டால் மனசு வலிக்கும். ஆகவே இருவருக்கும் சமமான மரியாதையை தரவேண்டும். அவுங்க வருவாங்க இவுங்க வருவாங்க என சொல்கிறார்கள். யாரும் வரமாட்டாங்க. வந்தாலும் சேர்ப்பதாக இல்லை. அவர்கள் இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள். அவர்களை மீண்டும் சேர்த்து கொள்ள கூடாது. யாருமே இல்லை என்றால் தான் வெற்றிடம். இப்போது அப்படி எந்த வெற்றிடமும் இல்லை.  

மக்களிடம் இரண்டு நடிகர்களும் சேர்ந்து சென்றாலும் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பற்றி கவலைப்படவேண்டாம். அதிமுகவிற்கு ஒரே எதிரி திமுக மட்டுமே. ஜெயலலிதா இல்லாததால் இப்போது ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள். ஸ்டாலின் ஒரு சுய சிந்தனை இல்லாத தலைவர்.  அவரிடம் முழு திறமையை காட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் பாதி முயற்சி எடுத்தாலே போதும்” என்று கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close