குழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி

குழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி
குழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி

சேலத்தில் இரண்டு வயது குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தலைமலைநகர் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி, மேனகா தம்பதி. இவர்களுக்கு சிவாஸ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக தனது குழந்தையுடன் மேனகா சென்றுள்ளார். 

அப்போது கோவிலுக்குள் சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும்போது, அருகே இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குழந்தையை எடுத்து கொஞ்சுவது போல் கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு குழந்தையை கீழே இறக்கி விட்டு தப்பி சென்றுவிட்டார். சற்றுநேரத்தில் குழந்தையின் தாய் குழந்தையை பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனை செய்தபோது, குழந்தையை கொஞ்சுவது போல் தூக்கிய பெண் தான், கழுத்தில் இருந்து செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் செயினை பறித்துச் சென்ற பெண் யார் ?என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com