திமுக, அதிமுகவுக்கு ரஜினிதான் மாற்று: தமிழருவி மணியன்

திமுக, அதிமுகவுக்கு ரஜினிதான் மாற்று: தமிழருவி மணியன்
திமுக, அதிமுகவுக்கு ரஜினிதான் மாற்று: தமிழருவி மணியன்

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே ஊழல்வாதிகளைக் கொண்ட கட்சிகள். அதனால் அவர்களுக்கு மாற்றாக ரஜினிகாந்த் இருப்பார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், “எங்கள் கோரிக்கையான மதுவிலக்கு, லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றுபவராக நடிகர் ரஜினிகாந்த் இருப்பார். தற்போது உள்ள இரண்டு அணிகளுமே ஊழல் மனிதர்களை கொண்டிருக்கிற மிக மோசமான அணிகள். இதனாலேயே திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ரஜினிகாந்தை பார்க்கிறோம். காந்திய மக்கள் இயக்கம் எதிர்பார்க்கும் ஊழலற்ற அரசியலை செயல்படுத்தும் மனிதராக ரஜினிகாந்த் இருப்பார்.

அவரின் அணுகுமுறையை பார்க்கும் போது அவருக்கும், காந்திய மக்கள் இயக்கத்திற்கும் கொள்கை முறையில் நல்ல தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அரசியலுக்கு வரும் ரஜினிகாந்தின் முடிவு வரவேற்கத்தக்கது. ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் அரசியல் களத்தில் வந்து நிற்க போவது நிச்சயம். ஒரு படம் வெளியாகும் போது அவர் இம்மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்த முறை அவர் அரசியலுக்கு வந்து நேர்மையான ஊழலற்ற அரசியல் அமைப்பை உருவாக்குவார்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com