“பாலில் உள்ள நச்சு புற்றுநோயை ஏற்படுத்தும்” - மருத்துவர்கள் எச்சரிக்கை 

“பாலில் உள்ள நச்சு புற்றுநோயை ஏற்படுத்தும்” - மருத்துவர்கள் எச்சரிக்கை 
“பாலில் உள்ள நச்சு புற்றுநோயை ஏற்படுத்தும்” - மருத்துவர்கள் எச்சரிக்கை 

கறவை மாடுகளுக்கு ஈரப்பதம் இல்லாத ஆரோக்கியமான உணவுகளை வழங்கினாலே பாலில் உருவாகும் நச்சுவை கட்டுப்படுத்த முடியும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலில் அஃப்லோடாக்சின் எம்1 என்ற நச்சு அளவுக்கு அதிகமாக உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பசு மாடுகளுக்கு வழங்கப்படும் வைக்கோல், சோளத்தட்டு உள்ளிட்ட உணவு மூலக்கூறு பொருட்களில் ஈரப்பதம் இருப்பதே நச்சு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.

சோளத்தட்டு, வைக்கோல் போன்ற மாட்டுத் தீவனப் பொருட்களை ஈரப்பதத்துடன் சேமித்து வைப்பதே இதற்கு காரணம். ஆகவே அதை நன்கு உலர்த்தி, பதப்படுத்தி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் உள்ள பூஞ்சை நச்சுகளை கட்டுப்படுத்தும் போதுதான், பாலில் ஏற்படும் அஃப்லோடாக்சினை குறைக்க முடியும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலில் ஏற்படும் அஃப்லோடாக்சின் எம்.1 நச்சு மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாலில் உள்ள நச்சுவினால் புற்றுநோய் ஏற்படும் என்றும் அஃப்லோடாக்சின் நச்சுவால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகவே கறவை மாடுகளுக்கு தரமான தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும், இதுதொடர்பாக விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com