Published : 23,Nov 2019 01:09 PM
மீண்டும் சரத்பவாரிடம் தஞ்சமடையும் 7 என்சிபி எம்.எல்.ஏக்கள்?

அஜித்பவாரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற என்சிபி எம்.எல்.ஏக்களில் 7 பேர் மீண்டும் சரத் பவாரிடமே சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இதனிடையே பாஜக உடனான கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், அஜித் பவார் மேற்கொண்டது தனிப்பட்ட முடிவு என்றும் சரத் பவார் தெரிவித்தார். அத்துடன் என்சிபியின் சட்மன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாவும் சரத் பவார் கூறினார்.
இதனிடையே அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற என்சிபி எம்எல்ஏக்கள் 7 பேர் தற்போது மீண்டும் சரத் பவாரிடமே தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.