[X] Close

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- முதலமைச்சர் பழனிசாமி

TN-local-body-elections-will-be-held-soon-Says-CM-Palanisamy

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர்.


Advertisement

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலுக்கு பலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை. செண்பகவள்ளி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.  


Advertisement

Advertisement
[X] Close