Published : 22,Nov 2019 04:58 AM
மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வர்: சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக - சிவசேனா கூட்டணி, தேர்தல் முடிவுக்குப் பிறகு முறிந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது சிவசேனா. இந்த புதிய கூட்டணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து பேச்சு நடத்தி வரும் 3 கட்சிகளும், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று தெரிவித்துள்ளார்.