[X] Close

குழந்தை கடத்தல் புகாரும்... நித்தியானந்தா பதிலும்..

Nithyanantha-explain-about-Child-Kidnap-allegation

நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறி அவரது ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

நடிகை ரஞ்சிதா உடனான வீடியோ, மதுரை ஆதீன வாரிசு, சூரியனை தாமதமாக உதிக்க வைத்தேன் எனக் கூறியது, விலங்குகளை பேச வைக்கப் போகிறேன் என்றது, சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலையத்தை முற்பிறவியில் தான் கட்டியதாகக் பேசியது என நித்யானந்தா மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வரிசையில் தான் தற்போது குழந்தைகளை நித்தியானந்தா கடத்தியதாக குஜராத்திலிருந்து புகார் எழுந்தது.

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் படித்து வந்த தனது 4 மகள்களை, தனது அனுமதி இல்லாமல் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு அழைத்து சென்றதாக பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆசிரமத்துக்கு சென்றபோது, அங்கு மகள்களை காண அனுதிக்கவில்லை எனவும் ஜனார்த்தன ஷர்மா புகார் கூறியிருந்தார். 


Advertisement

இதுதொடர்பாக குஜராத் காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த 4 குழந்தைகளை மீட்டுள்ளனர். மேலும், ஆசிரம நிர்வாகிகள் சாத்வி ப்ரயான் பிரியானந்தா மற்றும் பிரியதத்வா ரித்தி கிரண் ஆகியோரையும் கைது செய்தனர். குழந்தைகளை கடத்தி அவர்கள் மூலம் ஆசிரமத்துக்கு நிதி திரட்டியதாக நித்யானந்தா-வை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

இந்த சர்ச்சைகளுக்கு இடையே வழக்கம்போல் ஆன்லைனில் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் ஒரு விளக்கம் அளிக்க‌ வேண்டும். எனது அனைத்து குருகுலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடமும் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது. ஆனால், எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும்‌. நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக ஆன்லைனில் மட்டுமே பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி வரும் நித்யானந்தா, வெளிநாட்டில் பதுங்கியிருந்து ஆன்லைனில் மட்டும் சொற்பொழிவாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 


Advertisement

Advertisement
[X] Close