கோவையில் காவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், 130 சவரன் நகைகள், 15 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இடையர்பாளையம் அப்பாஸ் கார்டனைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கனகராஜ், தனது மனைவி சசி மற்றும் மகன் பிரவீன் ராஜ் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். மகன் பிரவீன் ராஜ் இன்ஜினியராக தந்தையுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மகளுக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சுமார் 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கோவையிலுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மாலை 7 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய் மயங்கி கிடந்துள்ளது. மேலும் முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதும் அதிலிருந்த செயின், வளையல், நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல்கள், முகப்புத்தோடு உட்பட 130 பவுன் நகைகள், 15 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்து செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவம் குறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது இப்பகுதியில் தொடர்ந்து இதேபோன்று கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்