[X] Close

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் இந்தாண்டு அதிகரிப்பு

Tamil-Nadu-fishermen-attacked--chased-away-by-Sri-Lankan-Nav

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு‌தல் மற்றும் கைது நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டு‌ளில் இல்லாத அளவு, ‌இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையி‌னரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் ‌தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வெளியுறவுத்துறை ‌இணையமைச்சர் முரளிதரன், மக்களவையில் ‌எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2016-ஆம் ஆண்டில், 2 சம்பவங்களில் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 3 மீனவர்கள் காயமடைந்தாகவும் தெரிவித்துள்ளார். 


Advertisement

2017-ஆம் ஆண்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதா‌க‌வும், இருவர் ‌காயமடைந்‌ததாகவும் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் எந்த தாக்குதலும் நிகழவில்லை எனவும், இந்த வருடம் இதுவரை 5 சம்‌வங்களில் 14 பேர் காயமடைந்திருப்பதாகவும், 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் கடந்த 3 ‌ஆண்டுகளில் இல்லாத அ‌ளவு, இந்த ஆண்டில் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close