தமிழக அரசியல் வாதிகளுக்கு ராஜபக்ச கட்சி அறிவுரை கூறவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ச மகன் நமல் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதாக இன்று அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பில் மகிந்தா ராஜபக்ச மகன் நமல் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக ராஜபக்சே கட்சி மற்றும் அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசியல் வாதிகளுக்கு அவர்கள் அறிவுரை கூற வேண்டாம். நான் ஏற்கனவே இலங்கை சென்றபோது மகிந்த ராஜபக்சவுடன் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி உள்ளேன்.
அத்துடன் இன்று ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு விவவாரம் சம்பந்தமாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இடம் வலியுறுத்தி உள்ளேன். தமிழக அமைச்சரவை மேயர் தேர்வு செய்வதில் பழைய முறையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இதன் மூலம் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'