Published : 28,May 2017 08:40 AM
விராத் கோலியை சீண்டும் பாக். பந்துவீச்சாளர்

விராத் கோலி எனது பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்படுவார் என்று பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்துள்ள அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர், இங்கிலாந்தில் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, ஜூன் 4ல் நடக்க இருக்கிறது. இந்த போட்டி குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டது முதலே இருந்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற தங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் கூறியுள்ளார். மேலும், இந்திய அணியின் கேப்டன் தனது பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். விராத் கோலிக்கு எதிராக 4 போட்டிகளில் பந்து வீசியுள்ளதாகவும், அதில் 3 போட்டிகளில் அவரது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜுனைத் கான் பந்துவீச்சில் இதுவரை 22 பந்துகளை சந்தித்துள்ள கோலி, 2 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.