
ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வரவேண்டுமா ? எங்க தல அஜித் வரக்கூடாதா? என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைத்துறையில் கமல்ஹாசன் 60 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். இதற்கான விழாவில் கலந்து கொண்ட ரஜினி, “தமிழக அரசு நான் கைந்து மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று 99 சதவீதம் பேர் சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்து தடைகளை தாண்டி ஆட்சி நீடித்து வருகிறது. அதைபோன்ற அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்றார்.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை. நாளை எதுவும் நடக்கலாம். ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா படத்தின் போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திவிட்டார்.
ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வரவேண்டுமா? எங்க தல அஜித் வரக்கூடாதா? அதிமுக ஜெயிப்பதற்காக எந்த வித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான். அதிமுகவிற்கு விசுவாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம்” எனத் தெரிவித்தார்.