ஆக்ராவின் பெயரை அக்ரவன் என மாற்ற உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ’இந்துஸ்தான் டைம்ஸ்’ உட்பட சில வெளிமாநில இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது ஆக்ரா நகரம். யமுனை ஆற்றின் கரையில் இருக்கும் இந்நகரில்தான், உலகப் புகழ்ப் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நகரத்தின் பெயரை மாற்ற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த மாநிலத்தில், முகல் சாராய் (Mughal Sarai) நகர், பண்டித தீனதயாள் உபாத்யாய் நகர் எனவும் அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும், ஃபைசாபாத்தை ஆயோத்யா என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்போது ஆக்ரா பெயரையும் மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆக்ராவின் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுத் துறைக்கு உ.பி.அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ஆக்ராவுக்கு இதற்கு முன் வேறு பெயர் ஏதும் இருந்திருக்கிறதா? வரலாற்றுப் பூர்வமாக அதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இதுதொடர்பான ஆய்வில் இறங்கியுள்ளது. இத்தகவலை அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகம் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘’எங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆய்வில் இறங்கியுள்ளோம். இருக்கிற தகவல்களை அரசுக்கு அனுப்புவோம். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது’ என்றார்.
ஆக்ராவுக்கு அக்ரவன் அல்லது அக்ரவால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி