[X] Close

நடிகை பரினீதி கழுத்தில் காயம்: ’சாய்னா’ ஷூட்டிங் கேன்சல்!

Parineeti-Chopra-injured-while-shooting-for-Saina-Nehwal-biopic

பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவாலின் வாழ்க்கை கதையில் நடிக்கும் நடிகை பரினீதி சோப்ரா காயமடைந்ததை அடுத்து, ஷூட்டிங் 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நேவாலின் வாழ்க்கைக் கதை ’சாய்னா’ என்ற பெயரில் சினிமாவாகி வருகிறது. இதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர், சாய்னா கேரக்டரில் நடிக்க இருந்தார். ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில், கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனால் ஸ்ரத்தாவுக்குப் பதிலாக சாய்னா நேவால் கேரக்டரில் பரினீதி சோப்ரா நடித்து வருகிறார். அமோல் குப்தே இயக்கும் இந்தப் படத்துக்காக, பேட்மின்டன் பயிற்சிப் பெற்று வந்தார் பரினீதி. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவர் கழுத்தில் காயம் அடைந்தார்.


Advertisement

இதுபற்றி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட பரினீதி, எதிர்பாராத விதமாகக் காயமடைந்தேன். பிசியோதெரபிஸ்ட் அபூர்வாவின் ஆலோசனையின் பேரில் உடல் தேறி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, படப்பிடிப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 


Advertisement

Advertisement
[X] Close