சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
மேலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு முறையாக கல்வி உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். கோரிக்கை தொடர்பான மனுக்களைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். சந்திப்பின்போது விழுப்புரம் எம்.பி.யும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் உடனிருந்தார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்