Published : 18,Nov 2019 02:21 AM

மிரட்டினார் குர்பாஸ், போராடினார் ஹோப்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கான்!

Gurbaz-s-52-ball-79-gives-Afghanistan-series-win

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வந்தது. ஒரு நாள் போட்டித் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இழந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து டி-20 தொடரில் பங்கேற்றது. 

முதல் டி-20 போட்டியில் தோல்வியைத் தழுவிய அந்த அணி, 2-வது போட்டியில் வெற்றி பெற்றது. 3 வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆப்கான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 52 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.

(குர்பாஸ்)

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆப்கான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சாய் ஹோப் (52) மட்டும் கடைசி வரை போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர், கரிம் ஜனத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்